கொல்கத்தா அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது .
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 4-வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீச்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.அதன்படி பெங்களூர் அணி முதலில் காட்டில் களமிறங்கியுள்ளது.இதில் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல் – கேப்டன் விராட் கோலி ஜோடி களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர் .
இதில் படிக்கல் 18 பந்துகளில் 21 ரன் எடுத்து ஆட்டமிழக்க ,அடுத்து களமிறங்கிய கே.எஸ்.பரத் ,9 ரன்னில் வெளியேறினார் .இதில் நிதானமாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலி 39 ரன்னில் அவுட்டானார் . இதன்பிறகு களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறினர் .இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்துள்ளது .இதில் கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேன் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார் தற்போது களமிறங்கியுள்ள கொல்கத்தா அணி 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.