16 வது லீக் போட்டியில் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதல் .
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 16 வது லீக் போட்டியில் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், நடைபெறுகிறது . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பீல்டிங்க்கை தேர்வு செய்துள்ளது.இதனால் முதலில் ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கி உள்ளது .
தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் -மனன் வொஹரா களமிறங்கினர் .இதில் பட்லர் 8 ரன்கள் ,மனன் 7 ரன்கள் எடுத்து வெளியேறினர் .அடுத்து களமிறங்கிய மில்லர் ரன் எடுக்காமல் அவுட் ஆனார் இவரைதொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி ,1 சிக்ஸரை அடித்து ,21 ரன்களில் ஆட்டமிழந்தார் . ராஜஸ்தான் அணி 8 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து ,47 ரன்களை குவித்துள்ளது .