ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றதுள்ளது .
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் எவின் லீவிஸ் 58 ரன்கள் குவித்தார். ஆர்சிபி அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட், சாஹல் மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர் .
இதன்பிறகு களமிறங்கிய ஆர்சிபி அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 25 ரன்னும் ,தேவ்தத் படிக்கல் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர் . இதன்பின் ஸ்ரீகர் பரத் – மேக்ஸ்வெல் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஸ்ரீகர் பரத் 44 ரன்னில் ஆட்டமிழக்க , மேக்ஸ்வெல் 50ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக ஆர்சிபி அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.