காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் மீண்டும் இணையும் விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி
நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்த விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி தற்போதுகாதுவாக்கில் ரெண்டு காதல் எனும் படம் மூலம் இணைந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தைப் பற்றிய தகவல் வெளியான நிலையில் பின்னர் அதைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் இத்திரைப்படத்தின் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன். அதனைத்தொடர்ந்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி 7 ஸ்கிரீன் நிறுவனமும் விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமுமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும்சேர்ந்து தயாரிக்க உள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும் நாயகிகளாக சமந்தா மற்றும் நயன்தாராவும் நடிக்கயிருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இருப்பதாக கூறியுள்ளனர். படப்பிடிப்பு வரும் மே மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.