கோயம்பத்தூரில் நிதிநிறுவனம் ஒன்று அடமானம் வைத்த வீட்டுப்பத்திரத்தை மறு அடமானம் வைத்து ரூ70 லட்சம் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் களப்பட்டி லட்சுமி நகர் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவருடைய மகள் தனது அம்மாவுடன் நேற்றையதினம் கோவை மாநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றை கமிஷனரிடம் அளித்துள்ளார். அதில் ஐயா நான் மேல் படிப்புக்காக அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூபாய் 14 லட்சம் கடன் வாங்கினேன்.
படித்து முடித்ததும் என்னால் அந்தப் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. கடனை உடனடியாக செலுத்துமாறு வங்கி அதிகாரிகள் வலியுறுத்தியதன் பேரில் கோவையில் செயல்பட்டு வந்த பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூபாய் 22 லட்சம் பெற்றுக் கொண்டு மூன்று மாதத்திற்குள் வட்டியுடன் பணத்தை செலுத்திவிட்டு வீட்டு பத்திரத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி நிதி நிறுவனத்தில் பணம் வாங்கினேன். இதையடுத்து மூன்று மாதங்களுக்குப் பின் ரூபாய் 22 லட்சம் பணத்தை அதன் வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த நிதி நிறுவனத்திற்கு சென்றேன்.
ஆனால் அவர்கள் என் பணத்தை வாங்க மறுத்துவிட்டார்கள். பின் இதுகுறித்து நிதி நிறுவனத்தில் அருகில் உள்ள மக்களிடம் விசாரித்ததில் அவர்கள் மோசடிக்கு பெயர் போனவர்கள் என்றும் விசாரித்த வரையில் நான் அடமானம் வைத்த பத்திரத்தை மற்றொரு வங்கியில் அடமானம் வைத்து ரூபாய் 70 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்ததும் அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நேரில் சென்று புகார் அளித்தும் அவர்கள் தனக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றும் நிதி நிறுவனம் தரப்பில் இருந்து தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதாகவும்ஆகவே அந்த நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எனது வீட்டு பத்திரத்தை மீட்க மாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.