Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்… பிரதமர் மோடிக்கு விவசாயிகள் கடிதம்…!!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் டெல்லி எல்லையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்று போராடி வருகின்றனர். இந்த போராட்டம் தொடங்கி ஆறு மாதங்களாக உள்ள நிலையில் அவற்றை குறிக்கும் விதமாக 26 ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் வீட்டில், வாகனங்களில், கடைகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்குமாறு அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதை தொடர்ந்து 3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெற்று, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளன.

Categories

Tech |