சகோதரன் ஆதரவில் வளர்ந்த 15 வயது சிறுமியை அந்த சகோதரர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் என்ற பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமிக்கு சிறு வயதிலேயே அவரது தந்தை இறந்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் உறவினர் ஒருவரின் ஆதரவில் வசித்து வருகிறார். அந்த பெண்ணிற்கு அவர் சகோதரர் முறை ஆகின்றது. அந்த சகோதரருக்கு தற்போது 26 வயதாகிறது. சகோதரனின் ஆதரவில் அந்த 15 வயது சிறுமி வளர்ந்த போது சகோதரர் அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார் அப்போது அவர் கத்திக் கூச்சலிடவே சகோதரர் அந்த சிறுமியை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி எதுவும் செய்ய முடியாமல் போனது.
பிறகு மூன்று ஆண்டுகளாக அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறிது நாள் கழித்து அந்த சிறுமி 3 மாதமாக தனியாக வேறு ஒரு உறவினர் உடன் வசித்து வந்துள்ளார். அவர் தனக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் அவருடன் இருந்த உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த உறவினர் சகோதரர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் சகோதரரே கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆதரவற்ற பெண்ணை, தங்கை என்று கூட பார்க்காமல் சகோதரரே கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.