தேனி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க பயனாளர்களை தேர்வு செய்வதற்கு ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டம் போடியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கு வசிப்பதற்கு பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 352 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 267 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது மீதமுள்ள 85 வீடுகளில் தங்குவதற்கு பயனாளர்கள் தேர்வு செய்வதற்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், போடி நகராட்சி ஆணையர் சகிலா, குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் குபேந்திரன், பொறியாளர் குணசேகரன், திமுக நகர செயலாளர் செல்வராஜ் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.