கோவையில் தமிழக அரசனை கண்டித்து பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆட்டம் இந்த அட்டகாசத்தை இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். இதுவரை இந்த வார்த்தையை நான் பயன்படுத்தியது கிடையாது. 2024 பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபை தேர்தல் நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பு இல்லை என்பதை சொல்லிக் கொள்கின்றோம்.
நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் மாற்றப்படுவீர்கள் என்பதையும் சொல்லி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்கள் முதலமைச்சருடைய வீட்டை முற்றுகையிடுகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை. பேருக்கு முதலமைச்சராக இருக்கலாம், எங்களை தாண்டி நீங்கள் கோட்டைக்கு செல்ல வேண்டும் அதற்கான ஒரு காலத்தை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்காதீர்கள், அதை செய்வதற்கு எங்களுக்கு விருப்பமில்லை.
முதலமைச்சர் நடுநிலை முதலமைச்சராக நடந்து கொள்ளும் வரை, பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டன் கண்ணியத்தோடு, கட்டுப்பாட்டோடு இருப்பான். நாங்கள் என்ன ஆயுதத்தை எடுக்கின்றோம் என்பதை எதிரி தீர்மானிக்கின்றான். தயவு செய்து நல்ல ஆயுதத்தை நீங்கள் எடுப்பதற்கு தீர்மானம் செய்யுங்கள் என்று சொல்லி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் மக்களுக்கும் உங்களை நம்பி வாக்கு செலுத்தி இருக்கின்றார்கள்.
நல்ல முறையிலேயே ஐந்தாண்டுகள் ஆட்சியை நிறைவு செய்வதற்கு முயற்சி எடுங்கள். நடுநிலைமையாக இருங்கள். ஏழையை முன்னேற்றங்கள், மக்களுக்கு நல்லது செய்யுங்கள். இது போன்ற விஷ பரிட்சைக்கு வித்திட வேண்டாம். இந்தப் போராட்டம் ஆரம்பம் மட்டும்தான், முடிவு கிடையாது. அடுத்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதை முதலமைச்சர் தீர்மானிக்க போகின்றார். எதற்கும் தயாராக இருக்கின்றேன் என பேசினார்.