Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் அடித்து கொலை …!!!

உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர் வழக்கை வாபஸ் பெறக் கோரி, அந்த சிறுமியின் தாயாரை அடித்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரை  சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் ,அதில் ஒருவன் மட்டும் சிறுமியின் வீட்டிற்கு வியாழக்கிழமை சென்று, வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளான்.

Image result for கான்பூர் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை

அவர்கள் மறுப்பு தெரிவித்ததும்  சிறுமியின் தாயாரையும், அங்கிருந்த இன்னொரு பெண்ணையும் தாக்கினான். இதில் பலத்த காயமடைந்த சிறுமியின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் ,சிறுமியின் தாயார் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |