நடிகை சுரபி கிளாமராகவும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரபி. இதை தொடர்ந்து இவர் வேலையில்லா பட்டதாரி, புகழ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இருப்பினும் அவர் முன்னணி நடிகையாக முடியாததால் கிளாமராக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் படங்களில் துறு துறு பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். குறும்புத்தனம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை உடையோரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் யார் மீது காதல் கொள்கிறேனோ அவரை திருமணம் செய்து கொள்வேன். மேலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். அதுமட்டுமன்றி கிளாமராகவும் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.