Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: சமரசம் செய்து வைக்கத் தயார் : ட்ரம்ப்

இந்தியா – சீனா பிரச்சனையை சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சைனா வுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் ”சைனா வைரஸ்” என்று அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது சர்சையை ஏற்படுத்திய நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி வைக்க தயார் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாக அவர் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த சமரசம் செய்து வைக்க நான் தயார் என்று சொல்லி இருந்தார். ஆனால் அந்த சமயத்திலே இந்தியா மீண்டும் மீண்டும் பலமுறை சொல்லி வந்தது இந்தியா பாகிஸ்தான் இடையே மூன்றாவது எந்த நாட்டுடன் மத்தியஸ்தம் செய்ய இடமே இல்லை.

எந்த பிரச்னையாக இருந்தாலும் நாங்கள் எங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்வோம். பாகிஸ்தானில் தீவிரவாதம் இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று இந்தியா சொல்லிவிட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தற்போது இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் தலையிட்டு சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் லடாக் – சீனா எல்லையில் இரு நாட்டு வீரர்களும் படைகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |