Categories
உலக செய்திகள்

“வடகொரிய அதிபரை மீண்டும் சந்திக்க தயார்” அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபரான  கிம் ஜோங் உன்னை மீண்டும் சந்திக்க தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணு ஆயுதங்களை முற்றிலுமாக  வடகொரியாவை அழிக்கச் செய்வது தொடர்பாக அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன்னிடம் வியட்னாமின் தலைநகரான ஹனோயிலில்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அப்போது டொனால்ட் டிரம்ப் பாதியிலேயே எழுந்து சென்று விட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் (John Bolton), அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு வார்த்தையின் போது பாதியிலேயே எழுந்து சென்றதற்கு அர்த்தம், நட்பின் காரணமாகத் தானே தவிர, அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை முறிந்தது என்பதன் பிரதிபலிப்பு அல்ல எனக் கூறினார். மேலும்  அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாகவும் ஜான் போல்டன் தெரிவித்தார்.

Categories

Tech |