Categories
தேசிய செய்திகள்

ரெடியான சோதனை கருவிகள் – 1st எங்க அனுப்புறாங்க தெரியுமா ?

இந்தியாவுக்கு சீனாவில் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டில் 3 லட்சம் உபகரணம் தயார் என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனமும் கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கொரோனா பரிசோதனையை உலக நாடுகளும் அதிகரித்து கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் கொரோனவை கட்டுப்படுத்த அதிவேக பரிசோதனை நடத்துவதற்கு தேவையான ரேபிட் டெஸ்ட் கிட்களை சீனாவில் ஆர்டர் செய்திருந்தது. 6.30 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் ஆர்டர் செய்தது தற்போது இந்தியா வந்துள்ளது.இதில் 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் தயார் நிலையில் உள்ளது என இந்திய மருத்துவ  ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

https://www.thehansindia.com/news/national/job-loss-pay-cuts-worry ...

 

 

தற்போதுள்ள 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தியாவில் 325 மாவட்டங்கள் கொரோனா பாதிக்காத மாவட்டங்களாக கண்டறியப்பட்டிருக்கிறத. 170க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே முதல்கட்டமாக இருக்கும் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை  கொரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலம் என்று வரையறுக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பு வைக்கப்பட இருக்கின்றது. இதனை மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |