Categories
அரசியல் மாநில செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர்.. C.M குடும்பதோடு நெருக்கம்… தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மாண்புமிகு அம்மாவுடைய அரசு வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 168 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு பணிகள் எல்லாம் துவங்கி சுமார் 50 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. அந்தத் திட்டத்தையும் இன்றைக்கு கைவிட இருக்கின்றார்கள்.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக பத்திரிகை வாயிலாக அறிக்கை விட்டிருந்தார்கள். மின்சார துறை அமைச்சர்  பேசுகிறார்,  கோவை மாநகராட்சி மாமன்ற  உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி நடைபெறும் என்று சொல்லி இருக்கின்றார்.

எனவே இன்றைக்கு மாண்புமிகு அம்மாவுடைய அரசு நீண்ட காலமாக கோவை மாநகர மக்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து பணிகளும் துவங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்எல்ஏ அவர்கள், நகர்ப்புற வளர்ச்சி துறை மானிய கோரிக்கை வருகின்றபோது பேசினார்.

வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மெத்தனமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது விரைந்து அந்த பணியை முடிக்க வேண்டும் என்று அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், மாண்புமிகு அமைச்சர் நேரு அவர்கள் அந்த பணியை விரைந்து செயல்பட்டு முடிக்கப்படும் என்று வாக்குறுதி தந்திருக்கின்றார்.

இதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நெருக்கமான ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் எல்.என்.டி பைபாஸில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்து இருக்கின்றார். இந்த பேருந்து நிலையத்தை அங்கே மாற்றினால் அந்த நிலமெல்லாம் அதிக விலைக்கு போகும். ஆகவே இந்த பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கு இதுதான் காரணம் வேறு எந்த காரணமும் கிடையாது என தெரிவித்தார்.

Categories

Tech |