கொரோனாவால் கஷ்டப்பட்ட பணிப்பெண்ணுக்கு குடியிருப்புவாசிகள் வீடு வாங்கி கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஆடம்பர கட்டிடம் ஒன்றில் கடந்த 20 வருடங்களாக பெண் ஒருவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருடைய பெயர் ரோஸா. தற்போது கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக 20 வருடங்களாக பார்த்த வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் வாழ்ந்து வந்த அவர், தன்னுடைய சகோதரி வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று தங்கி வந்துள்ளார். இந்நிலையில் ரோஸாவின் இந்த நிலையை புரிந்துக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ரோஸாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு தங்களுடைய குடியிருப்புக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
இதனால் தன்னை சுத்தம் செய்வதற்காக தான் அழைக்கிறார்கள் என்று நினைத்த அந்த ரோஸா சீருடை மற்றும் கையில் துடைப்பம் என்று கையில் வைத்துக் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த குடியிருப்புஅவருவாசிகள் அவருக்கு 2400 சதுர அடி உள்ள ஒரு வீட்டை சுற்றி காட்டியுள்ளனர். இதையடுத்து அவரை வீட்டை சுத்தம் செய்ய தான் குடியிருப்புவாசிகள் அழைத்துள்ளார்கள் என்று நினைத்து உள்ளார்.
ஆனால் ரோஜாவுக்கு அப்போது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை அவர்கள் கொடுத்துள்ளனர். ஆமாம். வறுமையால் வாடிய அந்த ரோஸாவுக்கு அந்த வீட்டை இரண்டு வருட குத்தகைக்கு இலவசமாக அந்த குடியிருப்பு வாசிகள் வாங்கி கொடுத்துள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத ரோஸா அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் இந்த செயலை கண்டு கண்ணீர் வடித்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.