Categories
மாநில செய்திகள்

உண்மையாவே க்ளைமேக்ஸ் தான் போல…. டிசம்பர் 7 இல் இரட்டை புயல்….. வானிலை ஆய்வுமையம் தகவல்….!!

புதிதாக உருவாகியுள்ள புயலானது இரட்டை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் புரெவி புயலை அடுத்து வருகிற டிசம்பர்-7ம் தேதி புதிதாக ஒரு புயல் உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள சூழலில் குமரியில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த புயல் காரணமாக தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புரெவி புயலே இன்னும் கரையை கடக்காத நிலையில் மேலும் ஒரு புயல் டிசம்பர் 7ஆம் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், “தற்போது கிடைத்துள்ள சாட்டிலைட் காணொளியில் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே புதிதாக உருவாகும் அந்த புயல் இரட்டை புயலாக மாறுவது போன்று காட்சி அளித்துள்ளது. மேலும் இது குறித்து தகவலை நாளை தான் உறுதியாக கூற முடியும் என்று தெரிவித்துள்ளது.

நிவர் புயல் வந்தபோதே நெட்டிசன்கள் க்ளைமேக்ஸ் ஆரம்பித்து விட்டது என்பது போல மீம்ஸ் போட்டு வந்தனர். இதையடுத்து நிவரின் தடம் மறைவதற்குள் புரெவி புயல் வந்து தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தாமல் கரையை கடந்து மழையை கொடுத்துள்ளது. இதே போன்று தற்போது புதிதாக புயல் உருவாக உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் அது இரட்டை புயலாக மாறும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் நிவரின் போது நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டது போல உண்மையாகவே க்ளைமேக்ஸ் தான் போல என்று சிலர் மீம்ஸ்களை பகிர தொடங்கி விட்டனர். என்னதான் இதை காமெடியாக எடுத்துக் கொண்டாலும் அவ்வப்போது அரசு சார்பிலும், வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |