REALME 3i ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடுகிறது.
இந்த மாத தொடக்கத்தில், REALME இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களாகிய REALME X மற்றும் REALME 3i அறிமுகம் செய்தது.REALME X நாளை முதல் அதாவது ஜூலை 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் , REALME 3ன் சற்றே புதிய வடிவான ஸ்மார்ட்போன் REALME 3i இன்று முதல்,முறையாக பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் சொந்த இணையதளத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவித்தது.
வெளியீட்டு சலுகைகளைப் பொறுத்தவரை, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால் 5 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம் என அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சலுகையாக ரூ .5,300 வரையும்,மொபிக்விக் சலுகையாக ரூ .1,500 வரையும் சலுகைகளை பெறலாம். ரியோமின் வலைத்தளத்திலிருந்து வாங்கும்போது மட்டுமே ஜியோ மற்றும் மொபிக்விக் சலுகைகள் பொருந்தும்.
ரியல்மே 3i 6.2இன்ச் HD+ டிஸ்ப்ளேயுடன்,கேமரா முன்பக்கத்தில் 13 எம்பி + 2 எம்பி இரட்டை பின்புற கேமராவுடன் வருகிறது.இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி 60 பிராஸஸர் உடன் கூடிய 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வரை சேமிப்பு வசதி உள்ளது.மென்பொருள் வாரியாக, ஸ்மார்ட்போன் Android Pie ஐ அடிப்படையாகக் கொண்டது.இதன் வருகை வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.