Categories
அரசியல்

வாவ்….!! ரியல்மி நிறுவனத்தின் அட்டகாசமான அறிமுகம்…. எதிர்பார்ப்புடன் வாடிக்கையாளர்கள்….!!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி2 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

புதிய ரியல்மி ஜிடி2 ப்ரோ ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரெட்டுடன் 2கே ரெஷலியூஷன் கொண்ட டிஸ்பிளே, Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட், Bio-polymer-ல் தயாரிக்கப்பட்ட பேக் பேனல், LTPO2 AMOLED பேனல், 1Hz ரெஃப்ரெஷ் ரேட் வரை  செல்லக்கூடிய டிஸ்பிளே ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் IMX766 சோனி சென்சாருடன் கூடிய 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 150 டிகிரி ஃபீல்ட் ஆஃப் விஷன் கொண்ட 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 40X மைக்ரோ லென்ஸ் போன்ற சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த போனில் 5000mAh பேட்டரி, 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் 8ஜிபி/128ஜிபி வேரியண்டின் விலை ரூ.49,999 ஆகவும், 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.57,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் விலையாக போனின் விலை ரூ.5000 குறைக்கப்பட்டு 8ஜிபி/128ஜிபி வேரியண்டின் விலை ரூ.44,999-ஆகவும் , 12ஜிபி/256ஜிபி வேரியண்டின் விலை ரூ.52,999 ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 14-ம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |