Flipkart-இல் நடைபெறும் Big Bachat Dhamal Sale விற்பனை தினத்தில் realme ஸ்மார்ட் டிவிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஆன்லைன் ஷாப்பிங் தளமாக விளங்கும் பிளிப்கார்ட்டில் Big Bachat Dhamal Sale விற்பனை தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கிய விற்பனை ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மூன்று தினங்களில் நடைபெறும் விற்பனையில் ஸ்மார்ட் டிவிகள், பிற மின்னணு பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் அதிக தள்ளுபடியில் வாங்கலாம். இவை பிளிப்கார்ட் விற்பனையில் ஸ்மார்ட் டிவிகள் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றது. ஆதலால் நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவி வாங்க விரும்பினால் இந்த தள்ளுபடி விற்பனை நாட்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் realme-யின் அருமையான ஸ்மார்ட் டிவி 4,000 ரூபாய்க்கு கிடைக்கும் என்பது உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் பிளிப்கார்ட்டில் இருந்து realme 2 இன்ச் ஸ்மாட் டிவியை மிக மலிவாக விலையில் வாங்கி மகிழலாம்.
இதனையடுத்து realme 32 inch HD ready LED smart Android TV அசல் விலை 17, 999 ரூபாய். ஆனால் நீங்கள் Flipkart Big Bachat Dhamal விற்பனையில் இதை 15, 999 ரூபாய் மட்டுமே செலுத்தி பெற முடியும். அதாவது இதில் 2,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக டிவியில் வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளை பயன்படுத்தி டிவியின் விலையில் கூடுதல் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். பின்னர் realme-யின் டிவிக்கு கூடுதலாக 5% விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் 800 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இவற்றில் டிஜிட்டல் வாலட் பேடிஎம் மூலம் பணம் செலுத்தினால் 50 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். எனவே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி 15,249 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி நீங்கள் சொந்தமாக்க முடியும். இதனைத் தொடர்ந்து realme 32 இன்ச் ஸ்மார்ட் டிவி-க்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளது.
இந்த டிவியை வாங்கும் போது நல்ல நிலையில் இருக்கும் உங்கள் பழைய டிவிக்கு 16,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பு அளிக்கப்படுகிறது. இருப்பினும் 11,000 ரூபாய் தள்ளுபடி என்பது உங்கள் பழைய டிவியின் மாடல் மற்றும் நிலையை பொறுத்தது என்பதை மறந்துவிட வேண்டாம். இந்த சலுகையை நீங்கள் முழுமையாக பயன்படுத்தினால் realme-யின் டிவியை வெறும் 4,149 ரூபாய் செலுத்தி உங்கள் வீட்டிற்கு வாங்கி கொண்டு செல்லலாம். இந்த ஸ்மார்ட் டிவியானது 1366×768 பிக்சல்கள் கொண்ட 32 இன்ச் HD ரெடி LED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 60HZ ரெப்ரெஷ் ரேட் ஆதரவை கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்களில் அணுகலும் இதனுடன் இருப்பது கூடுதல் சிறப்புடையதாகும்.