Categories
தேசிய செய்திகள்

REALME, VIVO, OPPO.. சீன செல்போன்களுக்கு இந்தியாவில் தடை?….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ரூ.12 ஆயிரத்திற்குக் குறைவான சீன செல்போன்களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. ஹாங்காங் பங்குச் சந்தையில் ஜியோமி நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைவைத்துள்ளது. இதன் காரணமாகவே ஒன்றிய அரசு சீன செல்போன்களுக்கு தடை விதிக்கும் தகவல் உறுதி செய்யும் விதமாக உள்ளது என பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். இதனால் Xiaomi, Poco, Realme, Vivo மற்றும் Oppo போன் சீன தயாரிப்பு செல்போன்களுக்கு பின்னடைவு ஏற்பட உள்ளது.

மேலும் உள்நாட்டு விற்பனையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் சில ஆண்டுகளாக இந்தியாவில் ரூ.15 ஆயிரத்திற்குக் கீழ் விற்பனையாகும் செல்போன்கள் அதிக அளவிற்கு விற்பனையாகியுள்ளது. இதில் சீன தயாரிப்பு செல்போன் நிறுவனங்களே அதிக லாபம் அடைந்துள்ளன. இந்நிலையில்தான் சீன செல்போன்களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |