Categories
டெக்னாலஜி பல்சுவை

அதிநவீன ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக பதுங்கி பாயும் ரியல்மி ..!!

ரியல்மி நிறுவனம்  தனது புதிய படைப்பான ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ தொடர்ந்து புதிய  ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது  .

ரியல்மி நிறுவனம் எக்ஸ்.டி. ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து ,   அடுத்த வாரமே விற்பனை செய்ய துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது  . இந்த விற்பனை நடவடிக்கை  வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது .

 

Image result for realme showroom

இதனைத் தொடர்ந்து  ரியல்மி நிறுவனத்தின்  மூத்த விளம்பர அதிகாரி சுகி என்பவர் டீசர் ஒன்றினை சமூக வலைதளயத்தில் வெளியிட்டுள்ளார் . மேலும் ,  டீசரில்  இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் சக்திவாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளது போல் காண்பிக்கப்பட்டுள்ளது  . குறிப்பாக , இந்த புதிய ஸ்மார்ட்போனின் பெயர்  குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை .

 

Image result for realme 5

 

 

இதற்குமுன், குவால்காமின் அதிநவீன சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரியல்மி நிறுவனம்  அறிமுகம் செய்து வந்தது . ஆனால் ,  பிளாக் ஷார்க் மற்றும் நுபியா பிராண்டு ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது. இதனால் ரியல்மி நிறுவனம் எந்த பிராசஸர் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |