Categories
டெக்னாலஜி பல்சுவை

256 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் … இணைய தளத்தில் விற்பனைக்கு ரெடி ..!!

ரியல்மி நிறுவனத்தின் 256 ஜிபி மெமரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையதளத்தில்  லீக் ஆனது. 

 

ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட் போன்னானது சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியது. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் 256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக புதிய வேரியண்ட்டானது சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

Image result for realme x

இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இதற்கு முன் சீனாவிலும் , இந்தியாவிலும் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் அறிமுகமானது . அந்த வகையில் ரியல்மி எக்ஸ் 256 ஜி.பி. வேரியண்ட் சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது .

Image result for realme x

சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜிபி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரியல்மி எக்ஸ் 4 ஜிபி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜிபி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 16,999 மற்றும் ரூ. 19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

Image result for realme x

இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் , புகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Image result for realme x

முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரேடியன்ட் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ரியல்மி எக்ஸ் மாடலில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 20வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 78 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆனியன் மற்றும் கார்லிக் வைட் என பிரத்யேக மாஸ்டர் எடிசனிலும் கிடைக்கின்றது.

Categories

Tech |