Categories
உலக செய்திகள்

இதுக்கு தான் பெண்கள் உயர்கல்வி கற்க தடை விதித்தோம்…. ஆப்கான் மந்திரி கூறிய விளக்கம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் உயர்கல்வியை கற்பதற்கு தடை விதிக்க வினோதமான காரணத்தை அந்நாட்டு மந்திரி கூறியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது, பெண்கள் மேல்கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும், எதிர்ப்பதோடு நாடு முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

சர்வதேச அளவிலும் இதற்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை மந்திரியாக இருக்கும் நேடா முகம்மது தெரிவித்திருப்பதாவது, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், திருமணத்திற்கு செல்வது போன்று உடை அணிந்து கொண்டு செல்கிறார்கள். இது மட்டுமல்லாமல் ஆண்களின் துணை இல்லாமல் கல்லூரிக்கு செல்கிறார்கள். இதனால் தான் தடை விதித்தோம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |