Categories
உலக செய்திகள்

மகாராணியார் இறந்த நாளில்… தாமதமாக வந்த ஹாரி… வெளியான காரணம்…!!!

மகாராணியார் இறந்த நாளன்று இளவரசர் ஹாரி, தாமதமாக வந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் மகாராணியாரை ஸ்காட்லாந்தில் இருக்கும் பால்மோரலில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்ற தகவல் அறிந்தவுடன் மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி போன்ற ராஜ குடும்பத்தினர் அவருடன் இருப்பதற்காக விரைந்தார்கள்.

அதன்படி இளவரசர் ஹாரி மற்ற அரச குடும்பத்தினரோடு சேர்ந்து லண்டனிலிருந்து RAF என்னும்  விமானத்தில் அபெர்டீனுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் தன் மனைவி மேகனுடன் அரச குடும்பத்தினருக்கு இருக்கும் பிரச்சனையால் அவரை உடன் அழைத்து செல்வது தொடர்பில் இருந்த குழப்பத்தால் ஹாரிக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த விமானத்தை அவர் தவறவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தனியார் ஜெட் விமானத்தில் அவர் பால்மோரலுக்கு சென்றிருக்கிறார்.

Categories

Tech |