விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா…? பொதுவாகவே வெள்ளை நிறத்திற்கு ஒளியைப் பிரதிபலிக்கக் கூடிய தன்மை இருக்கிறது. மேலும் சூரியனுடைய கதிர்வீச்சால் ஏற்படக்கூடிய சேதத்தை வெள்ளை நிறத்தால் குறைக்க முடியும். குறிப்பாக வேற ஏதாவது நிறங்களை விமானத்தில் பயன்படுத்தினால் அது காலப்போக்கில் சீக்கிரமாக மங்கி விடும்.
ஆனால் வெள்ளை நிறம் மங்கி போகாது. மேலும் மற்ற நிறங்களை விட வெள்ளை நிறத்தின் எடை மிகவும் குறைவாக இருக்கிறது. ஒருவேளை விமானத்திற்கு விபத்து ஏற்பட்டாலும் கூட அது வெள்ளை நிறத்தில் இருப்பதினால் எளிதாக கண்டுபிடித்து விட முடிகிறது. இதுவே விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கான சில காரணங்கள் ஆகும்.