Categories
உலக செய்திகள்

சிரிய இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய போராளிகள் – 2 பேர் உடல்கருகி பலி.!

சிரியாவில் அரசுப் படையின் ஹெலிகாப்டரை போராளிகள் சுட்டு வீழ்த்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யத் தயாரிப்பான எம்ஐ -17 ரக ஹெலிகாப்டர் ஓன்று நேற்று இட்லிப் நகரின் மேற்பரப்பில் பறந்து  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த கிளர்ச்சியாளர்கள் ஹெலிகாப்டரை குறி வைத்து தாக்கினர்.இதில் தாக்குதலுக்கு உள்ளான அந்த ஹெலிகாப்டர் தீ பற்றி எறிந்தவாறு கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்கும் வானத்தை சுற்றித் திரிந்தது.

Image result for Rebels shoot down Syrian helicopter as fighting intensifies

பின்னர் சிறு சிறு துண்டுகளாக நொறுங்கிய அந்த ஹெலிகாப்டர் கொளுந்து விட்டு எரியும் நெருப்புடன் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த தாக்குதலில் ஹெலிகாப்டர் பைலட் மற்றும் துணை விமானி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

 

Categories

Tech |