தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 15
பெரிய வெங்காயம் – 2
மொச்சை – 2 கப்
மிளகு – 10
சீரகம் – 1 தேக்கரண்டி
கசகசா – 4 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 1 கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வத்தல் – 10
கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
புளி – எலுமிச்சைப்பழ அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் மொச்சையை நன்றாக வேக வைத்து பின்னர் தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தீயில் நேரிடையாக சுட்டு அதன் தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வத்தல், கொத்தமல்லி விதை, தேங்காய் அரை கப், மிளகு, சீரகம் மற்றும் தேவைக்கேற்ப கருவேப்பிலை போட்டு நன்றாக வறுக்கவும்.
வறுத்த பொருட்களுடன் சுட்டு வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கொதிக்க வைத்த தண்ணீரில் கசகசாவை ஊறவைத்து மீதி இருக்கும் அரை கப் தேங்காயுடன் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி பின்னர் தோலுரித்து வைத்துள்ள மொச்சையை சேர்க்கவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து புளியை கரைத்து புளித் தண்ணீரையும் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும்.
தண்ணீர் கொதித்து புளியின் வாசனை போனதும் அரைத்து வைத்த தேங்காய் கசகசாவை போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிவிடவும்.
சுவைமிக்க மொச்சை கறி தயாராகிவிட்டது