Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக்கில் ரசீது கட்டாயம்… மீறினால் நடவடிக்கை”… ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் இனி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது கட்டாயம் என்று ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் மது வாங்குவதற்கு உரிய ரசீது வழங்க வேண்டுமென்றும், மது விலை பட்டியல் அடங்கிய தகவல் பலகையை கடைக்கு முன்பாக வைத்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மதுபானக் கடைகளிலும் உரிய ரசீது வழங்கப்படவேண்டும், அதன் நகலையும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

எப்போது வேண்டுமானாலும் இது தொடர்பான ஆய்வுகள் நடைபெறும். அப்போது உரிய முறையில் நகல்கள் பராமரிக்கப்படாத பட்சத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பிப்ரவரி 6ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு உள்ளது.

Categories

Tech |