Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணம் வரல…. காலால் எட்டி மிதித்து…. கல் எரிந்ததால்…. ATM மிஷன் சேதம்…. மர்ம நபர் கைது…!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் பணம் வராததால் ஆத்திரம் அடைந்த நபர்  ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில் ஏடிஎம் இயந்திர மையம் ஒன்று உள்ளது. அங்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க முயற்சித்த பொழுது இயந்திர கோளாறு காரணமாக பணம் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்  இயந்திரத்தை பலமுறை காலால் உதைப்பது, கல்லை கொண்டு தாக்குவது உள்ளிட்ட  காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வங்கியின் மேலாளர் அளித்த புகாரின் பெயரில் சேதரபட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |