பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கூலிப்படையை ஏவி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடிஸாவை சேர்ந்த சுகிரி என்பவரது மகள் ஷிவானி நாயக் இவருக்கு திருமணமாகி தாயின் வீட்டின் அருகே வசித்து வருகிறார். ஷிவானி சட்டவிரோதமாக மது விற்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இதனால் தாய் மற்றும் மகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தனது மகளை கொலை செய்ய திட்டமிட்ட சுகரி கூலிப்படை மூலம் 50 ஆயிரம் கொடுத்து ஆளை ஏற்பாடு செய்துள்ளார்.
கூலிப்படையின் ஒருவரான பிரமோத் ஜெனா ஏற்கனவே ஷிபானிக்கு அறிமுகமான நண்பர் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்து சென்று, அங்கு பதுங்கி இருந்த மற்ற இரு நபர்கள் உதவியுடன் கூர்மையான ஆயுதம் கொண்டு அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுரி மற்றும் பிரமோத் ஜனாவை கைது செய்தனர். மேலும் உறுதுணையாக இருந்த இருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.