Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல்வேறு சிகிச்சை பெற்றும்… உடம்பு சரி ஆகாததால்… இளைஞர் எடுத்த விபரீத முடிவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் வயிற்றுவலி தீராததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மானுரை அடுத்துள்ள ஆலவந்தான்குளத்தில் குணசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகனான இருதயராஜ்(26) கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இந்நிலையில் இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இளைஞன் அவரது வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் வைத்து கடந்த 4ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து இருதயராஜ் மயக்கமடைந்த நிலையில் இருந்ததை பார்த்த அவரது சகோதரன் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இருதயராஜ் உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து மானுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |