பிக்பாஸ் பிரபலங்கள் மீண்டும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இந்த சீசனில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் அதிக அளவில் பிரபலமடைந்து தங்களுக்கென தனி ரசிகர்களை உருவாக்கிக் கொண்டனர் . இந்நிலையில் பிக்பாஸ் பிரபலங்கள் மீண்டும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது .
நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டத்திற்கு நடிகர் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் போட்டியாளர்களை அழைத்துள்ளார். ஆர்பி சவுத்ரியின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகர் அருள்நிதி இணைந்து நடித்துள்ளனர்.