Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணம் மீட்பு – சிபிசிஐடி போலீசார் தகவல் …!!

அதிமுக அலுவலக கலவரத்தில் காணாமல் போன ஆவணங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதாக  சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிமுக கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த கலவரத்தின் போது பல்வேறு ஆவணங்கள் திருடப்பட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது. அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளர் சிவி சண்முகம் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் திருடி சென்று விட்டதாக அழிக்கப்பட்ட புகார் அடிப்படையில் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார்,  அதிமுக அலுவலகத்தில் இருந்து காணாமல் போன ஆவணங்கள் அனைத்தையும் தற்போது மீட்டு இருக்கிறார்கள். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக பத்திரம்,  ஜானகி எழுதி கொடுத்த ஆவணம், அண்ணா டிரஸ்டின் ஆவணம், பாண்டிச்சேரி, திருச்சி மற்றும் மதுரையில் உள்ள கட்சியின் சொத்துக்கள் பத்திரம் ஆகிய 113 ஆவணம் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் சிபிசிஐடி தரபில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |