Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. காணாமல் போன 21 வயது இளம்பெண்…. சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி….!!!!

கனடாவில் மாயமான இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள எட்மண்ட் பகுதியில் வசித்து வந்த Davinia Mckinney ( வயது 21 ) என்ற இளம்பெண் கடந்த 28-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மாயமானதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இளம்பெண் வீட்டிலிருந்து வெளியே சென்ற அன்று எட்மண்ட் பகுதியில் கடுமையான குளிர் நிலவி வந்ததால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதையும் மீறி அவர் குளிருக்கு ஏற்ற ஆடை அணியாமல் செல்போன் மற்றும் பர்சை வீட்டிலேயே வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார் என்று காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த இளம்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனால் காவல்துறையினர் அவருடைய மரணத்தில் குற்ற பின்னணி எதுவும் இல்லை என்று கூறுகின்றனர். இருப்பினும் இந்த மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |