இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8,049 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,62,594 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக 24 மணிநேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 311 பேர் மரணமடைந்துள்ளனர்.இதனால் இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 9195 ஆக அதிகரித்துள்ளது.