Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.15% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.15% ஆக உயந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20917 ஆக அதிகரித்துள்ளது. அதன் விகிதம் தற்போது 31.15% ஆக உள்ளது. நாடு முழுவதும் 44029 பேர் தீவிர மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 4213 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது” என கூறினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது தொடர்பாக அவர் பேசினார்.

அதில், ” திருத்தப்பட்ட கொள்கையின்படி,லேசான அறிகுறிகளுடன் வந்தவர்களை, சிகிச்சை முடிந்து 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம். 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்யலாம். அறிகுறி இல்லை என்றால் மறு பரிசோதனை தேவை இல்லை.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு வீட்டில் தனிமைப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார். பல்வேறு நாடுகளில் டிஸ்சார்ஜ் செய்யும் முறைகளை சோதனை அடிப்படையிலான மூலோபாயத்திலிருந்து அறிகுறி மற்றும் நேர அடிப்படையிலான மூலோபாயத்திற்கு மாற்றியுள்ளன. எனவே இதை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அதை மாற்றியுள்ளோம் என விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |