Categories
மாநில செய்திகள்

RED ALERT: வீட்டைவிட்டு வெளியே வராதீங்க… எச்சரிக்கை…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்து வருவதால் அங்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இன்று ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை திருச்செந்தூரில் கடந்த 8 மணி நேரத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு எச்சரிக்கை, தற்போது சிவப்பு வகை எச்சரிக்கையாக மாற்றப்பட்டது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |