Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை…. டிசம்பர் 8,9 பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான முக்கிய தகவல்….!?!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில்‌ சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு  உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மேற்கண்ட மாவட்டங்களில் டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை உரிய மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |