இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்று சொல்லப்பட்டநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருந்து அங்குள்ள அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.
அதே போல சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது எப்போதெல்லாம் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறையுமோ அப்போதெல்லாம் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும். அந்த வகையில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.