வெயிலின் தாக்கம் அதிகமாக அடுத்த 5 இருப்பதால் டெல்லிக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் கொடுத்துள்ளது .
வெயில் காலம் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் கடந்த காலத்தை காட்டிலும் தற்போது தான் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அனல்காற்று பயங்கரமாக வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்தது. இதனையடுத்து தற்போது டெல்லியில் ஜூன் 5 வரை வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் சென்று உச்சத்தை தொட இருப்பதாகவும், ஆகையால் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறி டெல்லிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை கொடுத்துள்ளது. மேலும் உத்தரபிரதேசம் டெல்லி வரையிலான மாநிலங்களில் உறுதியுடன் கூடிய அனல் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.