Categories
மாநில செய்திகள் வானிலை

தொடரும் கனமழை… மும்பைக்கு ரெட் அலெர்ட்…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

மும்பையில் இன்று முதல் 29ம் தேதி வரை மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மும்பையில் பெய்து வரும் கனமழை குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில் அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மும்பையின் பாட்னா உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for மும்பை கனமழை

மகாராஷ்டிராவின் மற்ற நகரங்களான நாசரேத் மற்றும் அவுரங்காபாத் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தானே மற்றும் மும்பை பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மட்டுமின்றி அடுத்த இரு நாட்களுக்கு கடலோர ஆந்திரா தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |