Categories
உலக செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்புகள்!”.. யாருக்காக..? வெளியான வீடியோ..!!

ஆஸ்திரேலிய நாட்டின் கிறிஸ்துமஸ் தீவில் பார்க்குமிடம் எங்கும் சிவப்பு நிறத்திலான நண்டுகள் தென்படுவதும், அவற்றிற்காக அரசு சாலையோரங்களில் தடுப்புகள் மற்றும் தற்காலிக பாலங்களை அமைத்திருப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில், ஏராளமான சிவப்பு நண்டுகள் காணப்படுகின்றன. அதற்கு காரணம், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான், நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டம். இந்த மாதங்களில் சிவப்பு நிற நண்டுகள் காட்டு பகுதியிலிருந்து கடலை நோக்கி கூட்டமாக இடம்பெயர்கிறது.

அதாவது ஆண் நண்டுகள், தங்களின் இடங்களை விட்டு வெளியேறி, வழிப்பாதையில் அவர்களது துணையான பெண் நண்டுகளையும் சேர்த்துக்கொண்டு கடலுக்கு புறப்படுகிறது. இந்திய பெருங்கடலுக்கு சென்ற பின்பு, ஒவ்வொரு நண்டும் சுமார் ஒரு லட்சம் முட்டைகளை இடுகிறது.

அந்த முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்து, கடற்கரைக்கு வந்தடைகிறது. அதன்பின்பு, அவை காட்டை நோக்கி செல்கிறது. லட்சக்கணக்கான குஞ்சுகள் முட்டைகளில் இருந்து வெளிவருகிறது. ஆனால் அவற்றில் அதிகமானவை மீன்கள் போன்ற கடல் உயிரினங்களுக்கு உணவாகி விடுகிறது.

அது போக மீதம் இருக்கும் நண்டுகள் தான் காட்டிற்கு சென்றடைகிறது. எனவே தான், அரசு அலுவலர்கள், நண்டுகளின் பாதுகாப்பிற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். நண்டுகள் பாதுகாப்பாக கடலுக்கு செல்ல வழி பாதை அமைத்திருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளையும் சாலையோரமாக வாகனங்களை நிறுத்துமாறு, கூறி நண்டுகள் செல்வதை பார்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பல்வேறு நாடுகளில், மக்களுக்கு உணவாக நண்டுகளை பயன்படுத்தப்படும் நிலையில், இந்த கிறிஸ்துமஸ் தீவில் நண்டுகளை பிடிக்க தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |