Categories
பல்சுவை

செஞ்சிலுவை சங்கத்தின் 7 முக்கிய கோட்பாடுகள்….!!

செஞ்சிலுவை இயக்கம் உலக அளவில் மிக விரிவாக ஒழுங்குமுறையுடன் செயல்படும் அமைப்புக்களில் ஒன்றாகும். செஞ்சிலுவை கிறிஸ்தவ மதத்தை காட்டுவதாக அமைந்துள்ளதால் இஸ்லாமிய நாடுகளில் அவ்வியக்கத்தின் சின்னம் செம்பிறையாகக் மாற்றப்பட்டது. ஆரம்ப காலத்தில் யுத்தத்தில் காயமடைந்த மக்களுக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் செயற்பாடுகள் தற்போது விரிவடைந்துள்ளது. செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் ஏழு முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது.

  1. மனிதாபிமானம்
  2. பாரபட்சமின்மை
  3. நடுநிலைமை
  4. சுதந்திரத் தன்மை
  5. தொண்டு புரிதல்
  6. ஒற்றுமை
  7. சர்வவியாபகத் தன்மை

இயற்கை அனர்த்தங்களினாலும் யுத்தத்தினாலும் பாதிப்புறும் மக்களுக்கு மத, இன, மொழி பேதமின்றி இந்த இயக்கம் அன்புக்கரம் நீட்டி உதவுகின்றது. கருத்துவேறுபாட்டில் ஈடுபட்டிருக்கும் எந்த தரப்பினரையும் சாராது, அரசியல் வேறுபாடுகளில் அக்கறை காட்டாது, நடுநிலைமையுடனும், சுதந்திரத்துடனும் இந்த இயக்கம் செயற்பட்டு வருகின்றது. அதேநேரம் அந்தந்த நாடுகளின் சட்டத்துக்கு உட்பட்டே செயல்படுகின்றது.

Categories

Tech |