Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சிவப்பு மண்டலங்களுக்கு விதிக்கப்படும் தடைகள் ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

அதில், கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை.

சிவப்பு மண்டலங்களுக்கு விதிக்கப்படும் தடைகள்:

விமானம், ரயில், மெட்ரோ மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்த 21 நாட்களுக்கு இயங்காது மக்கள் அதிகமாகக்கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது. சிவப்பு மண்டலங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி

சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும் ஏணைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும். பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை…. பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்க அனுமதி. சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம் சிவப்பு மண்டலங்களில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி.

Categories

Tech |