ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் இனி அரசின் கீழ் செயல்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில்,
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், கொரோனா சிகிச்சையை தீவிரப்படுத்துவதற்காக இனி அரசின் கீழ் செயல்படும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் அந்தந்த தனியார் மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவர்களும் அரசால் பயன்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்புக்கு அப்பகுதி மக்கள் பெரும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.