Categories
டெக்னாலஜி பல்சுவை

REDMI மொபைல்ஸ் : புதிய வரவாக REDMI K20 ப்ரோ அறிமுகம்….!!

REDMI நிறுவனம் புதியதாக REDMI K20 ப்ரோ  என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

சியோமியின் ரெட்மி பிராண்டு தன்னுடைய  ரெட்மி கே20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மடலை  அறிமுகம் செய்தது. இந்த வகை புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD PLUS  AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B ROM , கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க வசதியாக 48 MP பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 MP 124.8° அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

Image result for ரெட்மி கே 20

இந்த வகை ஸ்மார்ட்போன் பிளேம் ரெட், கிளேசியர் புளு மற்றும் கார்பன் ஃபைபர் பிளாக் நிறங்களில் கிடைக்கின்றது. இதன் 6 GB. RAM 128 GB மெமரி மாடல் விலை ரூ. 27,999 என்றும், 8 GB RAM , 256 GB மெமரி மாடலின் விலை ரூபாய் 30,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விற்பனை வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் தொடங்க இருக்கின்றது.

 

Image result for ரெட்மி கே 20

ரெட்மி கே20 ப்ரோ வகை ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள்:

  • 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  • ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
  • அட்ரினோ 640 GPU
  • 6 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
  • 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
  • ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
  • டூயல் சிம் ஸ்லாட்
  • 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 0.8μm பிக்சல், 6P லென்ஸ், லேசர் AF, EIS
  • 8 எம்.பி. 1/4″ OV8856 டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4
  • 13 எம்.பி. 1/3″ சாம்சங் S5K3L6 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4
  • 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm பிக்சல்
  • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
  • ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
  • யு.எஸ்.பி. டைப்-சி
  • 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  • 27 வாட் சோனிக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

 

Categories

Tech |