Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லா செலவையும் குறையுங்க….! தமிழக அரசு அதிரடி சிக்கன நடவடிக்கை …!!

தமிழக அரசு கொரோனா கட்டுப்பட்டு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசின் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் தலைமையில் நிதி அமைச்சரும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நிதித்துறை சார்ந்த ஒரு முக்கியமான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் வெளிப்பாடாக தற்போது முக்கிய அறிவிப்பு ஒ ன்று வெளியாகியுள்ளது. அதில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு செலவுகளை ஈடுசெய்யும் வகையில் அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்புகளில் பயணிக்க அனுமதி கிடையாது, அரசு செலவில் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கிடையாது உள்ளிட்ட அரசின் பல்வேறு செலவுகளை குறைக்க  தமிழக அரசாணை பிறப்பித்ததுள்ளது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டதில் தமிழக அரசின் 2020 21 ஆம் நிதியாண்டின் செலவினங்கள் மதிப்பீட்டு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழக அரசு 20 சதவீதம் செலவுகளை குறைக்க முடிவு செய்திருக்கிறது என்று அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விழாவில் வழங்கப்படும் சால்வைகள்,  பூங்கொத்துகள், நினைவு பரிசுகளை தவிர்க்க வேண்டும். அரசு அதிகாரிகள் விமானத்தின் உயர்வகுப்பில் பயணிக்க கூடாது. பிற மாநிலங்களுக்கு விமானத்தின் சென்றாலும், அது ரயில் கட்டண அளவுக்கு அனுமதி வழங்கபடும்.

அத்தியாவசிய துறைகளான  சுகாதாரத்துறை, தீயணைப்பு துறைகளுக்கு மட்டுமே உபகரணங்கள் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற துறைகளுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்வதில் ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல அத்தியாவசிய துறையான சுகாதாரத்துறை, தீயணைப்பு துறைக்கு மட்டுமே வாகனங்கள் வாங்க அனுமதி, மற்ற எந்த ஒரு துறைக்கு வாகனங்கள் வாங்க அனுமதிக்கப்படவில்லை. இதன் மூலமாக 25 முதல் 50 சதவீதம் வரையிலான செலவினங்களை குறைக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |