ப்ரீபெய்டு கார்டுகளைப் பயன்படுத்தி உங்களுடைய அன்றாட செலவுகளை வெகுவாகக் குறைக்க முடியும். அது எப்படி என்பது குறித்து இப்பொது பார்க்கலாம்.
கொரோனாவிற்கு பிறகு ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதுவும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்கின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றில் தேவைக்கு அதிகமாக செலவு செய்வதால் பலரும் பெரும் கடன் வலையில் மாட்டிகொள்கின்றனர். எனவே செலவுகளைக் கட்டுப்படுத்த எதாவது வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பிரீபெய்டு கார்டு:
செலவுகளைக் குறைக்க நீண்ட காலமாகவே ப்ரீபெய்டு கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பணத்தை அதில் ஏற்றி அந்த அளவுக்குள் மட்டுமே நம்மால் செலவு செய்ய முடியும். இதை வைத்தும் ஆன்லைன் ஷாப்பிங்க செய்யலாம். சில ப்ரீபெய்டு கார்டுகளை வைத்து ATM-இல் பணம் எடுக்கலாம். இந்த ப்ரீபெய்டு கார்டுகள் வங்கிகளுடன் இணைக்கப்படாதவை. பணத்தைப் பாதுகாக்கவும், செலவுகளைக் குறைக்கவும் இந்த ப்ரீபெய்டு கார்டுகளை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சில வங்கிகள் ஆன்லைன் மூலமாக ப்ரீபெய்டு கார்டுகளை வாங்கும் வசதியைக் கொண்டுள்ளன. இல்லையெனில் வேறொரு வங்கியில் இருந்து ப்ரீபெய்டு கார்டுகளை வாங்குவதாக இருந்தாலும் KYC ஆவணங்களைக் கொடுத்து வாங்கலாம். இந்த ப்ரீபெய்டு கார்டுகளை வாங்குவதற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே செலவாகும்.
மொபைல் வாலட்:
மொபைல் வாலட் பயன்படுத்தியும் நீங்கள் உங்களுடைய செலவுகளைக் குறைத்து கொள்ள முடியும். இதில் ஆன்லைன் பரிவர்த்தனைகளையும் செய்து கொள்ளலாம். ப்ரீபெய்டு கார்டுகள் போலவேதான் இந்த வாலெட்களும். KYC பொறுத்து வாலெட்களில் பணத்தின் அளவு இருக்கும். செல்போன் என்னுடன் சரி செய்யப்பட்ட வாலெட்களில் நீங்கள் மாதத்துக்கு ரூ.10,000 வரையில் வைத்துக்கொள்ளலாம். முழு KYC-யையும் முடித்தால் மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரையில் இதில் ஏற்றலாம்.