வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ 1952-ம் ஆண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட விதிகளில் திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி அல்லது இபிஎப் கணக்கில் உள்ள பணத்தில் 75 சதவீதம், இதில் எது குறைவோ அதை உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இது தொடர்பான விதிமுறை திருத்தம் 2020, மார்ச் 28 முதல் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக உறுப்பினர்களிடம் இருந்து வரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) உத்தரவிட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.